திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் முக்கிய வருவாய் கோட்டமாக ஆரணி திகழ்ந்து வருகிறது. எனவே, நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலன் கருதியும் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.