சிஎஸ்கே அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர் அல்பி மோர்கல் மற்றும் கேரத் பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அல்பி மோர்கல், 2008 - 2013 வரை சென்னை அணியின் நட்சத்திர வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஐபிஎல் தொடரைக் கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕