பிரதமர் அலுவலக புதிய கட்டடங்கள் நாளை திறப்பு

டெல்லியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடங்களான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1, 2 ஆகியவற்றை பிரதமர் மோடி நாளை (பிப். 13) திறந்து வைக்கிறார். சிதிலமடைந்த பழைய அரசு அலுவலகங்களுக்கு மாற்றாக, நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டடங்கள் பல்வேறு அமைச்சகங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி