தமிழகத்தில் கட்டிட உயரம், வணிக பயன்பாடு, பார்க்கிங் தொடர்பாக புதிய விதிகளைத் திருத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்டிட உயர வரம்பு 18.30 மீட்டரிலிருந்து 19.50 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 12 மீ மற்றும் சென்னைக்கு வெளியே 9 மீ சாலைப் பகுதியில் வணிக அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களில் 75 சதுர மீட்டருக்கு ஒரு கார் பார்க்கிங் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.