நிகோபர் தீவுகளில் ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. வணிக ரீதியிலான பயணிகள் போக்குவரத்து மற்றும் ராணுவ பாதுகாப்பு ஆகிய 2 முக்கிய பயன்பாடுகளுக்காகவும் இந்த நவீன விமான நிலையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பும், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியும் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.