நெஸ்லே நிறுவனத்தின் ‘லோ ஃபேட் டெய்ரி வைட்னர்’ (Nestle Low Fat Dairy Whitener) மனித பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரபல லலித் ஹோட்டலில் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்தத் தயாரிப்பின் விற்பனைக்கு உடனடித் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.