ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் 'ஹாங்காங் சிக்ஸ்' (6 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் சுதீப் ஜோரா ரன் மழை பொழிந்துள்ளார். மொத்தம் 12 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 47* ரன்கள் எடுத்தார். அதிலும் அவர் எதிர்கொண்ட கடைசி 10 பந்துகளில் 6 6 6 6 0 6 4 4 4 4 விளாசினார். இப்போட்டியில் நேபாள அணி 137 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 45 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.