நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாயமான 2,500 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. வெள்ளப்பெருக்கில் படுகாயமடைந்த 2,301 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காத்மாண்டு மருத்துவமனைகளில் 140 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியும், காயமடைந்தவர்களுக்கான நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.