நேபாள பெருவெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் நேபாளமே உருக்குலைந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், பெருவெள்ள மீட்பு பணியில் 7,592 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த பேரிடரில் 52 சிறுவர்கள், 33 சிறுமிகள் , 269 பெண்கள், 480 ஆண்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.