திருநெல்வேலி ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (26) காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இன்று (ஜூலை 31) கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த திமுக MP கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "இப்படியான துயரம் நடக்கக்கூடாது என்பதுதான் சமூகத்தின் உணர்வு. முதல்வரும் கவினின் குடும்பத்துடன் துணை நிற்கிறார். நிச்சயம் நியாயம் கிடைக்கும்" என தெரிவித்தார்.
நன்றி: Sun News