காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு CBCID வசம் ஒப்படைத்திருந்தது. அதன்படி, இன்று (ஜூலை 31) நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், உதவி காவல் ஆணையர் சுரேஷிடம் இருந்து வழக்கு ஆவணங்களை CBCID DSP ராஜ்குமார் நவாஸ் பெற்றுக்கொண்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறார். வழக்கின் முதல் விசாரணை அதிகாரி என்ற முறையில் சுரேஷுடன் ஆலோசனையும் நடைபெற்றது.