சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது தந்தை வரதராஜனை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன், தனது மகள் வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகளுடன் உள்ள சக்திவேல் என்பவரை காதலித்ததால் கோபமடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பதி, திருவண்ணாமலை என தலைமறைவாக சுற்றித்திரிந்த இவர், நேற்று (பிப்., 3) சேலம் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது கைது செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.