அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக உடைந்த நிலையில், தற்போது வேலுமணி தரப்பினர் அனைவரும் பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ சந்தித்து ஒன்றிணைந்தனர். சி.வி.சண்முகம் மட்டும் வராத நிலையில், அவரை சமாதானம் செய்யும் முயற்சி தொடர்கிறது.
நன்றி: சன் செய்தி