நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, டெல்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் இன்று (மே 16) தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
நன்றி:SunNews