நீட் தேர்வு முறைகேடு- உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு!

கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட்தேர்வில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதி விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி