நீட் தேர்வு முறைகேடு வழக்கு- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வரும் 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவிகளின் அனைத்து அணிகலன்களை கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி புகழேந்தி வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி