வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான கட்டணத் திருப்புதல், அறிவித்தபடி மே 21-ல் தொடங்காததால் மாணவர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இதற்கான லிங்க் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் திறக்கப்படும். மாணவர்கள் விண்ணப்ப எண் மூலம் லாகின் செய்து, வங்கிக் கணக்கு மற்றும் IFSC விவரங்களைச் சமர்ப்பித்து பணத்தைப் பெறலாம். பொதுப்பிரிவினருக்கு ரூ.1700, ஓபிசிக்கு ரூ.1600, எஸ்சி/எஸ்டிக்கு ரூ.1000 கட்டணம் திரும்பத் தரப்படும்.