இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, செக் குடியரசை சேர்ந்த தனது பயிற்சியாளர் ஜான் ஜெலெஸ்னியுடனான ஓராண்டு கால பயணத்தை நேற்று (ஜன.10) முடித்து கொள்வதாக அறிவித்துள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு, ஜான் ஜெலெஸ்னியிடம் பயிற்சி பெற்ற நீரஜ், அவரது வழிகாட்டலில் முதன்முறையாக 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது நீண்ட கால கனவை நிறைவேற்றினார். இருப்பினும், ஒரு சீசன் முடிந்த நிலையில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக நீரஜ் தெரிவித்துள்ளார்.