மூணாறில் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்: குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம் மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகை நீலக்குறிஞ்சி பூக்கள் தற்போது மலைப்பகுதிகளில் நீல நிற கம்பளம் விரித்தது போல் பூத்து குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறிற்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்நீல மலர்களை கண்டு ரசித்து, ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வருகின்றனர்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி

✕
✕