ஆதாரில் தற்போதைய மொபைல் எண்ணை புதுப்பிக்காத பட்சத்தில் வங்கி சேவைகள், பான் இணைப்பு, அரசு மானியங்கள் மற்றும் e-KYC போன்ற முக்கிய ஆன்லைன் சேவைகளுக்கான OTP-களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்த தடைகளை தவிர்க்க, பொதுமக்கள் தங்களின் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் புதிய எண்ணை எளிதாக புதுப்பித்து கொள்ளலாம். பெரும்பாலான சேவைகள் OTP அடிப்படையிலானவை என்பதால், எதிர்கால பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க மொபைல் எண்ணை விரைவாகப் புதுப்பிப்பது அவசியமாகும்.