பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறனின் இளைய மகன் மாணிக்கம் நெடுமாறன் (57), இன்று (அக்., 1) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காலமானார். மெல்பர்னில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த இவர், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவி புத்த துறவியாக வாழ்ந்துவந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் அவரும் மனைவியும் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி

✕
✕