தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று (பிப்., 07) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைகளுக்கான வழிகாட்டும் இந்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு விரைவில் உள்ளது' என்று தெரிவித்தார்.