பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யாவின் 111-வது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (நவ.18) சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.