இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அறிவியலாளரும், 'இயற்கை நாயகன்' என்று போற்றப்படுபவருமான மாதவ் காட்கில் (83) உடல்நலக் குறைவால் நேற்று (ஜன.8) காலமானார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த தனது வரலாற்று சிறப்புமிக்க ' காட்கில் அறிக்கை' மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்த இவர், இந்தியாவின் தேசிய சுற்றுச்சூழல் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.