தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.9) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று மதியம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொண்டை தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.