ஜூன் 21-இல் நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளுக்காக நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த 3ஆம் தேதி நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி