பீகார் தேர்தல் வெற்றிக் குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பீகார் மக்கள் NDA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளனர். பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் மீதான தங்களது மகத்தான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை விட முன்னேற்றம், நல்லாட்சி மற்றும் தேசிய நலன் எப்போதும் மேலோங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.