கோவையில் சிறுமி கொலை தொடர்பாக தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சிறுமி கடத்தி கொல்லப்பட்டது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: NewsTamilTV24x7