கடந்த 2023ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படத்தில் ஹரீஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் நடித்திருந்தனர். சிறந்த இசையமைப்பாளராக 'வாத்தி' திரைப்படத்திற்காக (பாடல்கள்) ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெறுகிறார்.