சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் என பிரத்தியேக தேசிய கீதங்கள் எழுத்து வடிவில் இருக்கின்றன. ஆனால், எழுத்து வடிவில் அதிகாரப்பூர்வ தேசிய கீதம் இல்லாத நாடு உங்களுக்கு தெரியுமா? ஆம், ஸ்பெயின் நாட்டுக்கு என அதிகாரப்பூர்வ தேசிய கீதம் எழுத்து வடிவில் இல்லை. அதே நேரத்தில் லா மார்ச்சா ரியல் (தி ராயல் மார்ச்) என்ற இசை தேசிய கீதமாக ஒலிக்கப்படுகிறது. ஸ்பானிய சமூகத்தின் பன்முகத்தன்மை, பிற மொழி மக்கள், கலாச்சார மரபுகள் காரணமாக அவர்களுக்கு என தனி தேசிய கீதத்தை ஸ்பெயின் மக்கள் உருவாக்கவில்லை.