நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தவர் வெற்றிக்குமரன். இவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனிடையே அக்கட்சியில் இருந்தும் விலகி தற்போது அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். புதிய அரசியல் பயணத்தின் மூலம் மக்கள் சேவைக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.