தேனி: நரியூத்து கிராமத்தில் ஏற்கெனவே உள்ள தாா்ச் சாலையை சீரமைக்க க. மயிலை ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், வனத் துறையினா் தடை விதித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனிடையில் கிராம சபைக் கூட்டத்தில், சாலைப் பணிகளுக்கு வனத் துறையினா் விதித்த தடையைக் கண்டித்தும், பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை.