இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா-நடிகர் நானி கூட்டணியில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் ஆக.21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 1980-களில் செகந்திராபாத் பின்னணியில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக போராடும் தலைவராக நானி நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.