நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு (மார்ச்.2) போதை கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றி:NewsTamil