திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு, திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அலுவலக முற்றுகை போராட்டம் நடத்திய திமுகவினர், இந்திப் பெயரை கருப்பு மை பூசி அழித்த நிலையில், திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.