தமிழக பட்ஜெட்டில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திலிருந்து 'கலைஞர்' என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் 'மகளிர் உரிமைத் திட்டம்' எனப் குறிப்பிட்டு ரூ.14,414 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான புதிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
நன்றி: பாலிமர்