தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தக சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை நிறைவேற்ற தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.