நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சுகன்யா (38), ஷீலா தனலட்சுமி (49), ஜெயக்குமார் (40) ஆகியோர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. புறநகர் போலீசார் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.