குமாரபாளையம் பகுதியில் மூன்று வயது சிறுமிக்கும், பன்னிரண்டு வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக வரதராஜன் (59), மணி (62) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களை அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சாமிநாதன், உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. நாமக்கல் மாவட்ட போலீசார், இரு சம்பவங்களும் தனித்தனியானவை என்றும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.