நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே லாரியில் சட்டவிரோதமாக கிரவல் மண் ஏற்றி கடத்தியதாக நடராஜன் (58) மற்றும் விஜய் (30) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.