நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண், நீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2024-25 ஆம் வருடத்தில் இதுவரை 22 முகாம்கள் மூலமாக 868 மண்மாதிரிகளும், 257 நீா் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம் வருடத்தில் அக்டோபா் மாதத்திற்கு கீழ்காணும் விவரப்படி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது எனவும், அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.