நாமக்கல் வட்டம், திருச்செங்கோடில், திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் திடீரென எதிர்ப்புறம் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இவ்விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து காவல்துறை பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தது. இந்நிலையில் பேருந்து கழக அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் சேர்ந்து வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.