திருச்செங்கோடு: வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

திருச்செங்கோடு சமயபுரம் வீதியை சேர்ந்தவர் கோகுல்தாஸ் (38). நேற்று (டிசம்பர் 9) காலை இவரது நண்பர், பக்கத்து வீட்டு பாப்பாத்தியின் வீட்டின் பூட்டை மர்மநபர் உடைத்துக் கொண்டுள்ளார் என, கோகுல்தாஸிற்கு தகவல் அளித்தார். இதன் பேரில், கோகுல்தாஸ் தனது நண்பர்களுடன் பாப்பாத்தி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஒருநபர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரித்த போது, கொக்கியால் பூட்டை உடைக்க முயன்றது தெரியவந்தது. அவரை திருச்செங்கோடு டவுன் போலீசில் கோகுல்தாஸ் ஒப்படைத்தார். 

போலீசாரின் விசாரணையில் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றவர், லாரி பாடி பில்டிங் தொழிலாளி வெங்கடாசலம் (33) என்பதும், மலையடிவார தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து சேலம் சிறையில் வெங்கடாசலம் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி