தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்காமூர்த்தி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுடன் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.