நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வாகனத்தை திருடிய சந்திரன் மற்றும் வாங்கிய ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திருடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.