எங்கும் பசுமை நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக உலக இரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு புதுப்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளில் 100 மரக்கன்றுகள் நடுவதற்கான முதல் கட்டப்பணி தொடங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் ராஜ், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கணேஷ் குமார் கலந்து கொண்டனர்.