திருச்செங்கோடு தேர்த்திருவிழாவில் அர்த்தநாரீசுவரரை பக்தி வெள்ளத்தில் அழகுற வீற்றிட தனது பணியை சிறப்புடன் நிறைவு செய்யும் பெரிய தேர் என்று திருச்செங்கோட்டு மக்களால் அன்புடன் அழைக்கபடும் அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர். 476 ஆண்டுகளாக அர்த்தநாரீசுவரரை அழகுற சுமந்து பவனி வந்துள்ளது. அடுத்த ஆண்டு புதிய தேரில் அர்த்தநாரீசுவரர் பவனி வருவதால் இந்தாண்டு திருவிழாவில் இருந்து பெரிய தேர் விடைபெறுகிறது.