நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவி வகிக்கும் அருண்ராஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது.