திருச்செங்கோடு: அர்த்தநாரீசுவரர் கல்லூரியில் விளையாட்டு விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சர்வதேச கபடி வீரரும் வருமான வரித்துறை உதவி ஆணையருமாகிய என். சுப்பிரமணியன், முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும், சென்னை இந்தியன் வங்கியின் மூத்த மேலாளருமாகிய மனோகரன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி