திருச்செங்கோடு தேர்த்திருவிழா மண்டபக்கட்டளையில் கைலாசநாதர் கோயிலில் நடராஜர் தரிசன காட்சி நடைபெற்றது. அபிசேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நடராஜருக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், கரும்புச்சாறு, சந்தனம், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்து வழிபட்டனர்.